'பூ’ ராமு இறுதி ஊர்வலத்தில் பறை அடித்த பிரபல நடிகர்.. அந்த அளவுக்கு அவர் மேல பாசம் இருக்கு!
ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 'பூ' ராமுவின் உடல் கொண்டு செல்லப்பட்டு செவ்வாய்க்கிழமை மதியம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் பறை அடித்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.