Short News

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜர் ரெடி!

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜர் ரெடி!

எலெட்ரிக் கார்களுக்கான வயர்லெஸ் சார்ஜரை பி.எம்.டபிள்யூ நிறுவனம் வடிவமைத்துள்ளது. எந்த வித கனெக்ஷனும் இல்லாமல் காரை அந்நிறுவனம் தயாரித்துள்ள வயர் லெஸ் பேட்டிற்கு மேல் சரியாக பார்க் செய்தாலே தானாக சார்ஜ் ஏறிவிடும். கார் சார்ஜ் ஆகும் தகவல்கள் அனைத்தும் உங்களது ஸ்மார்ட் போனில் பெற்றுக்கொள்ளலாம். அதே போல சார்ஜ் ஏறும் போது ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும் உடனடியாக ஸ்மார்ட் போனில் அலாட் செய்யப்படும். 
இன்றைய சென்னை வானிலை!

இன்றைய சென்னை வானிலை!

சென்னையில் இன்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை 8.30 மணிக்கு 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இன்று பகலில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை பதிவாகும். இன்று சில மேகக் கூட்டங்களுடன் வெயில் நன்றாகவே கொளுத்தும். இன்றைய சூரிய உதயம்: காலை 05:42, மறைவு: மாலை 06:29; சந்திர உதயம்: காலை 11:23, மறைவு: நள்ளிரவு 12:19.
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சலால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்!