விரைவில் விற்பனைக்கு... மஹிந்திரா XUV700!
ஆட்டோமொபைல்
- 5 days ago
கடந்த ஃபிப்ரவரி மாதம் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், புதிய தலைமுறை சாங்யாங் ஜி4 ரெக்ஸ்டன் எஸ்யூவி மஹிந்திரா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய எஸ்யூவி, மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் விலை உயர்ந்த மாடலாக, 2.2 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகை தருகிறது. வரும் பண்டிகைக் காலத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.