Short News

சுஸுகி பர்க்மேன் மேக்ஸி  ரக ஸ்கூட்டர்  விலை விபரம்!

சுஸுகி பர்க்மேன் மேக்ஸி ரக ஸ்கூட்டர் விலை விபரம்!

இந்தியாவில் மேக்ஸி ஸ்டைலில் வரவுள்ள சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் வரும் 19ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை ஸ்கூட்டர் பிரபலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் இந்தியர்களை கவரும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த ஸ்கூட்டர் ரூ.69,671 என்ற மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஈராக்கியில் பரவிய போராட்டம்!

ஈராக்கியில் பரவிய போராட்டம்!

இளைஞர்கள்  மத்தியில் நிலவும்  வேலையில்லா திண்டாட்டம்,  அரசின் மீது உள்ள அதிருப்தி காரணமாக ஈராக் அரசை  கண்டித்து  அந்நாட்டு மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  பஸ்ரா நகரில் நடந்த போரட்டத்தில் ஏராளமானோர்  கலந்து கொண்டு ஈராக் அரசுக்கு எதிராக  கோஷங்களை எழுப்பினர்.
கும்பகோணத்தில் கருகிய 94 'மலர்கள்': இன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள்!

கும்பகோணத்தில் கருகிய 94 'மலர்கள்': இன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள்!

கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் 14ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று குழந்தைகளின் பெற்றோர்கள், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக இந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து காவு வாங்கும் செல்ஃபி!

தொடர்ந்து காவு வாங்கும் செல்ஃபி!

ஐதராபாத்தில் உள்ள கொவ்வூரை சேர்ந்தவர் கண்டமணி ஸ்ரீ வயூபுத்ரா.நண்பர்களுடன் வெளியே சென்ற அவர் ஹூக்ளி ஆற்றங்கரை ஓரத்தில் செல்ஃபி எடுக்க முயற்சித்தார். அப்போது அவ்வழியே வந்த ரயில் மோதி வயூபுத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more