Short News

குழந்தைகளுக்காக உலகின் முதல் ஏர்பேக் சீட்!

குழந்தைகளுக்காக உலகின் முதல் ஏர்பேக் சீட்!

லண்டனில் உள்ள மேக்ஸி-காஸி என்ற சீட் தயாரிப்பு நிறுவனம் உலகின் முதல் குழந்தைகளுக்கான ஏர்பேக்குடன் கூடிய சீட்டை தயாரித்துள்ளது. இதில் கார் விபத்தில் சிக்கும் போது குழந்தையின் கழுத்து, தோள்பட்டை, முகம் ஆகிய பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் ஏர்பேக் விரிவடைந்துவிடும். இதனால் விபத்தில குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த ஏர்பேக் சீட் இந்திய பண மதிப்பில் 51,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
டி20 லீக்: இன்று தோனி Vs. கோலி!

டி20 லீக்: இன்று தோனி Vs. கோலி!

டி20 லீக் கிரிக்கெட் போட்டிகள் படு விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் நடந்து வருகின்றன. பெங்களூருவில் இன்று இரவு 8 மணிக்குத் தொடங்க உள்ள 24ஆவது போட்டியில், மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன. புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 2ஆவது இடத்திலும் பெங்களூர் அணி 6ஆவது இடத்திலும் உள்ளன.
இனி எந்த க்ரீமும் வேண்டாம்... இந்த எண்ணெய் மட்டும் போதும்...

இனி எந்த க்ரீமும் வேண்டாம்... இந்த எண்ணெய் மட்டும் போதும்...

விளக்கெண்ணெய் என்றாலே சமைப்பதற்கும் விளக்கொளிக்கு பயன்படுவது பற்றி தான் ஞாபகமே வரும். ஆனால் உங்களுக்கு தெரியுமா இது அழகு பராமரிப்பிலும் தன் காலை பதிய வைத்துள்ளது. ஆமாங்க கூந்தல் பராமரிப்பிலிருந்து அழகிய பொலிவான முகத்தை பெற என்று இதன் பங்கு சாலச் சிறந்தது மேலும் இதைக் கொண்டு புருவழகு, இமையழகு, கூந்தழகு போன்ற அழகு பராமரிப்பையும் மேற்கொள்ள முடியும்.

இன்றும் மணி காட்டும் சோழர் கால சோலார் க்ளாக்!

இன்றும் மணி காட்டும் சோழர் கால சோலார் க்ளாக்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரில் உள்ள சிவன் கோவிலில் இன்றும் உள்ளது சோழர் கால சூரியக் கடிகாரம். காலை 6 மணி வரை மாலை 6 மணி வரை அரைவட்ட வடிவில் உள்ளது இந்தக் கடிகாரம். சூரிய ஒளி இருக்கும்போது இதிலுள்ள கம்பி எந்த எண் மீது விழுகிறதோ, அதுதான் அப்போதைய நேரம். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் விக்கிரம சோழன் நிறுவியதுதான் இந்த சூரியக் கடிகாரம்.