Short News

”16 ஆயிரம் கோடி செல்லாத பணம் மக்கள் இடத்தில் உள்ளது”

”16 ஆயிரம் கோடி செல்லாத பணம் மக்கள் இடத்தில் உள்ளது”

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகும், சுமார் 16 ஆயிரம் கோடி மதிப்பிலான செல்லாத பணம் இன்னும் மக்கள் இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமாக வங்கிகளுக்கு சுமார் 15.44 லட்சம் கோடி செல்லாத நோட்டுகள் வந்து சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
புழல் சிறையில் தஷ்வந்துக்கு கைதி எண் 6937!

புழல் சிறையில் தஷ்வந்துக்கு கைதி எண் 6937!

சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கொலையாளி தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் தஷ்வந்த்துக்கு 46 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவனை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு புழல் சிறையில் கைதி எண் 6937 கொடுக்கப்பட்டுள்ளது
‘சீமராஜா’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘சீமராஜா’ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ரஜினிமுருகன்' படத்தை தொடர்ந்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் 3வது முறையாக ‘சீமராஜா' என்ற படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா முதல் முறையாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பில் கேட்ஸ் செலுத்தும் வரி எவ்வளவு தெரியுமா?

பில் கேட்ஸ் செலுத்தும் வரி எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் அமெரிக்க மதிப்பில் 90 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடியை வரியாக செலுத்துவதாக கூறப்படுகிறதுய். இந்த வரி என்பது பில் கேட்ஸ் ஏற்கெனவே வாங்கிவைத்துள்ள சொத்து மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருவாய் அடிப்படையில் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.