Short News

100% பங்குகள் விற்க ஏர் இந்தியா முடிவு!

100% பங்குகள் விற்க ஏர் இந்தியா முடிவு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.50,000 ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை விற்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 100 % பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வடிவேலு பாணியில் பெங்களூரில் தொடரும் வழிப்பறி!

வடிவேலு பாணியில் பெங்களூரில் தொடரும் வழிப்பறி!

வடிவேலு ஒரு படத்தில் ஒருவரை வாகனங்கள் முன்னால் சென்று விழ வைத்து, போலியாக விபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளிடம் பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பார். இதே பாணியை பயன்படுத்தி பெங்களூரில் சிலர் நூதன வழிப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பெங்களூரில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்போடு இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த செடி வீட்ல ஓரமா சும்மா இருக்கா?... இது பல நோய் தீர்க்குற பொக்கிஷம் தெரியுமா?

இந்த செடி வீட்ல ஓரமா சும்மா இருக்கா?... இது பல நோய் தீர்க்குற பொக்கிஷம் தெரியுமா?

ஸ்நேக் பிளான்ட் என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை ஒரு பிரபலமான மூலிகை செடியாகும். இதன் தாவர பெயர் சான்சவிரியா ஆகும். இது பல்வேறு நன்மைகள் கொண்ட ஒரு மூலிகை செடியாகும். பாம்பு தலை விரிப்பது போன்ற தோற்றத்தை இந்த செடி கொண்டதால் இது பாம்பு கற்றாழை என்று அழைக்கப்படுகிறது. இந்த செடி வீட்ல ஓரமா சும்மா இருக்கா?... இது பல நோய் தீர்க்குற பொக்கிஷம் தெரியுமா?

மெரினாவில் ஜெ. நினைவிடம் கூடாது: ஹைகோர்ட் தலைமை நீதிபதி கருத்து!

மெரினாவில் ஜெ. நினைவிடம் கூடாது: ஹைகோர்ட் தலைமை நீதிபதி கருத்து!

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அமைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த அவர், "கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்பட எந்தக் கட்டடமும் கட்டப்படக் கூடாது என்பதே என் தனிப்பட்ட விருப்பம்" என்றார்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more