Short News

3 லட்சம் வேலைவாய்ப்பு தர காத்திருக்கும் மின்னாற்றல் திட்டங்கள்!

3 லட்சம் வேலைவாய்ப்பு தர காத்திருக்கும் மின்னாற்றல் திட்டங்கள்!

மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் மின்னாற்றல் திட்டங்கள் மூலம் இந்தியாவில் இருக்கும் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக இருக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தியை வருகிற 2022ம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட்டாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் பேருக்கு வருகிற 2022ம் ஆண்டிற்குள் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மகளிர் அணி நிர்வாகிகளுடன் ரஜினி தீவிர ஆலோசனை!

மகளிர் அணி நிர்வாகிகளுடன் ரஜினி தீவிர ஆலோசனை!

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தமிழக ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், புதுச்சேரியைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கிராமங்கள், பேரூராட்சியில் இனி வரும் காலங்களில் ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்துவது குறித்து விவதித்து வருகின்றனர்.
இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டால் வளர்ச்சி பாதிக்கும்: மோடி!

இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டால் வளர்ச்சி பாதிக்கும்: மோடி!

இளைஞர்கள் வீசியும் ஒவ்வோர் கல்லும் காஷ்மீரின் வளர்ச்சியை பாதிக்கும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். நேற்று காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இருக்கும் 14 கிலோ மீட்டர் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். ரமசாலன் நோன்பை முன்னிட்டு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கூறிய மோடி, நேற்று முறை தீபாவளிக்கு காஷ்மீர் வந்ததாகவும் இந்த முறை ரமலானுக்கு வந்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். 
ஸ்டார்பக்ஸ் புதிய சலுகை!

ஸ்டார்பக்ஸ் புதிய சலுகை!

அமெரிக்காவின் பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டிள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதியில் இருந்த ஸ்டார்பக்ஸ் கடைசியில் அமர்ந்திருந்த இரு கருப்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தங்களது கடையில் எதுவும் வாங்காவிட்டாலும், கடையில் அமராலாம் மேலும் கழிவறையை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.