Short News

ஏர் ஏசியா-வின் அதிரடி ஆஃபர் டிக்கெட்!

ஏர் ஏசியா-வின் அதிரடி ஆஃபர் டிக்கெட்!

ஏர்ஏசியா இந்தியா, உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு விளம்பர சலுகையாக 20 சதவீதம் வரை ஆஃபர் விலையில் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்தச் சலுகையின் கீழ் 2018 அக்டோபர் 22 வரை டிக்கெட் புக் செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வெளிநாட்டு விமானப் பயணங்களுக்கு 2018 ஏப்ரல் 22 வரை டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

டி20: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த சென்னை!

புனேயில் இன்று நடந்த டி20 லீக் போட்டியைக் கைப்பற்றியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அணி பிடித்துள்ளது. இதுவரை ஆடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று, 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது சென்னை அணி. இன்று நடந்த போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் அபார சதம் அடித்ததன் மூலம், இன்றைய சிறந்த ஆட்டக்காரர் விருதை வென்றார்.
ஆப்பிளின் புதிய ஐபோன்கள்... விரைவில்?

ஆப்பிளின் புதிய ஐபோன்கள்... விரைவில்?

இந்த ஆண்டில் மட்டும் 3 ஐபோன்களை வெளியிட ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவற்றில் ஒன்று ஐபோன் எஸ்.இ.2 ஆகும். வரும் 2018 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்தப் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 4 முதல் 8ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது.
டி20 லீக்: ராஜஸ்தானை சுருட்டிய சென்னை!

டி20 லீக்: ராஜஸ்தானை சுருட்டிய சென்னை!

புனேயில் இன்று நடந்த டி20 லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. 205 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி, 18.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை மட்டும் எடுத்தது. ஸ்கோர்: சென்னை-204/5 (20); ராஜஸ்தான்-140 (18.3)