Short News

கள்ளநோட்டை கண்டறியும் புதிய மிஷின்!

கள்ளநோட்டை கண்டறியும் புதிய மிஷின்!

வங்கிக்கு வந்துள்ள செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் உள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை கண்டறிய பிரத்யேக இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் உள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை பிரித்தெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

மகள் வயது பெண்ணை முறைப்படி திருமணம் செய்த நடிகர்!

பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், தனது மகள் வயது இளம்பெண்ணை இன்று முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார்.52 வயதாகும் அவருக்கு கவுஹாத்தியைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று மும்பை அலிபாக்கில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தாவணி அணிய விரும்பும் அர்ஜுன் ரெட்டி கதாநாயகி!

தாவணி அணிய விரும்பும் அர்ஜுன் ரெட்டி கதாநாயகி!

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்நிலையில் தமிழில் ஜிவி.பிரகாஷ் மற்றும் ஜீவாவுடன் இணைந்து நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராம கதாப்பாத்திரத்தில் பாவாடை, தாவணி அணிந்து நடிக்க ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் கிராம பெண் கதாப்பாதிரத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியாக ரங்கஸ்தளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  
நிர்மலா தேவியால் ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவு

நிர்மலா தேவியால் ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவு

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தமிழகத்தை புரட்டு போட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ. "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், ஆசிரியர் சமுதாயத்திற்கே தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது" என்றார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் 28-ம் தேதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.