Short News

தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்வு!

தாஜ்மஹால் நுழைவு கட்டணம் உயர்வு!

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் பார்க்கப்படும் தாஜ் மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. தாஜ்மஹாலை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகின்றனர். இந்நிலையில், தாஜ்மஹாலை காண்பதற்கான நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.40 லிருந்து ரூ.50 யாக உயர்த்தப்படுகிறது. தாஜ்மஹாலின் மசூதியை காண ரூ. 200 உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.
ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

ரயிலின் 'X' குறி பற்றி விளக்கம்!

இந்தியாவில் பஸ் போக்குவரத்து அதிகாரித்தாலும் இன்றும் பலரது விருப்பமாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்காக பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் நாடுகின்றனர், இதற்கு காரணம் கழிப்பறை வசதி என்று பயணிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வேயின் சில விஷயம் தெரியவருவதில்லை. இதில் ரயில் பின்புறம் இருக்கும் 'X' என்ற குறி எந்த பழுதும், பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிக்கிறது.
வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழலில் இந்தியாவே சிறப்பானது: டிரம்ப் மகன்!

வர்த்தக சூழல் என்பதை ஒப்பிடும்போது சீனாவை விட இந்தியாவே சிறப்பாக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் டொனால்டு ஜான் தெரிவித்துள்ளார். மேலும் மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள சீர்த்திருத்தம் என்பது சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கும் என தெரிவித்தார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை மேனேஜர் கைது!

பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை மேனேஜர் கைது!

வைரவியாபாரி நிரவ் மோடி, சுமார் 11 ஆயிரத்தி 400 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இந்த விவகாரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றிய மேலாளர் பதவி ராஜேஷ் ஜிந்தாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் 2009-2011 ஆண்டுகளில் இந்த மோசடி நடைபெற்ற  பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில்பணியாற்றியவர்.