Short News

தங்கம் விலை மேலும் குறைவு!

தங்கம் விலை மேலும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் தற்போது ஒரு கிராமுக்கு ரூ.2,884 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,072 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,300க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.40 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமூக ஆர்வலரை சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்!

சமூக ஆர்வலரை சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்!

ஜார்க்கண்ட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சுவாமி அக்னிவேஷூக்கு பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவருக்கு கறுப்புக் கொடி காட்டியும் முழக்கங்கள் எழுப்பியும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது திடீரென அக்னிவேஷ் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த சுவாமி அக்னிவேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 
ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

அழகோ அழகு...! பார்ப்பதற்கு இவ்வளோ அட்டகாசமாக இருப்பவர்கள் யார் தெரியுமா...? இந்த ஸ்பெக்ஸ் போட்ட மனிதர்களே. ஆமாங்க...' இவர்களுக்கென்றே பல பிரத்தியேக சிறப்புகள் இருக்கிறது. பொதுவாகவே கண்ணாடி அணிந்தால் அழகு என்பது ஒரு வழக்கு மொழியாகவே மாறி வருகிறது. கண்ணாடி அணிவதால் சில பல நன்மைகளும் இருக்கின்றது. ஹலோ...ஸ்பெக்ஸ் மனிதர்களே...! நீங்களே கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்...!

ஆணின் வாழ்க்கையில் ஏழு தருணங்களில் பெண் முக்கியமான பங்குவகிக்கிறாள்!!

ஆணின் வாழ்க்கையில் ஏழு தருணங்களில் பெண் முக்கியமான பங்குவகிக்கிறாள்!!

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. உறவுகள் அற்ற வாழ்க்கை உவமைகள் அற்ற கவிதைகளை போல பெரியதாய் சுவைக்காது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள்.அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது.

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more