Short News

தங்கம் விலை குறைவு!

தங்கம் விலை குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.17 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,975 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,800 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,230க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.10 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,100 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் எஸ்.ஐ. தூக்கிட்டு தற்கொலை!

சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார் ஜோசப். அவர் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலைக் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு எஸ்.ஐ. தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடா: பாதசாரிகள் மீது டிரக் மோதி 9 பேர் பலி!

கனடாவின் டொரண்டோ நகரில் பாதசாரிகள் கூட்டத்திற்குள் ஒரு டிரக் வேகமாக வந்து மோதியது. இதில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 16 பேர் படுகாயமடைந்தனர். அந்த டிரக்கின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் டொராண்டோவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்!

ராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி பகுதியில் தொடர்ந்து 4ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்குச் செல்ல அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். தென் கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அப்பகுதி மீனவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.