Short News

தங்கம் விலை மேலும் குறைவு!

தங்கம் விலை மேலும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,957 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,656 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,070க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
காவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..!

காவிரி வரவில்லை என்றால் பாஜக காரணம், வந்தால்..!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "காவிரி வரவில்லை என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு என்கிறார்கள், ஆனால் காவிரி வந்துவிட்டால் அதற்கு காரணம் உச்சநீதிமன்றம் என்கிறார்கள், காவிரிக்காக கர்நாடக முதல்வராக பதவி ஏற்பின் போது குமாரசாமி கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும், என்றார்.
சங்கத் தலைவருடன் வாரிசு நடிகருக்கு திடீர் உறவு: என்னப்பா இது!

சங்கத் தலைவருடன் வாரிசு நடிகருக்கு திடீர் உறவு: என்னப்பா இது!

பல்துறை வித்தகரான அந்த வாரிசு நடிகர் சங்கத் தலைவரை தேர்தல் நடக்கும் போது கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால், என்னமோ ஏதோ தெரியவில்லை, ஆளே மாறிப் போன அவர் தற்போது சங்கத் தலைவரை பல விழாக்களில் பாராட்டி வருகிறார். இதில் நேற்றைய படவிழாவில் கட்டிப்பிடித்து அந்த வரிசு நடிகர் செல்ஃபியும் எடுத்துகொண்டுள்ளார். ஆனால் சங்கத் தலைவரை அவருடைய அப்பா இன்றும் கழுவிக் கழுவி தான் ஊத்துகிறார்,
பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 8 மாத பிஞ்சு குழந்தை பலி!

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதலில் 8 மாத பிஞ்சு குழந்தை பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் அருகே இன்று அதிகாலை முதல் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கேரி பட்டால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை குண்டு பாய்ந்து உயிரிழந்தது. மேலும் 5 போலீஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.