Short News

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையைவிட மாலையில் கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,889 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,112 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,340க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.30 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வீணாகிப் போன பும்ராவில் அசத்தல் கேட்ச்!

வீணாகிப் போன பும்ராவில் அசத்தல் கேட்ச்!

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கிடையில் நேற்று நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா ஒரு அருமையான கேட்சைப் பிடித்தார். ஆனால், அதற்கு அவுட் கொடுப்பதற்குப் பதிலாக, தென் ஆஃப்ரிக்க வீரர் டேவிட் மில்லருக்கு சிக்ஸர் கொடுக்கப்பட்டது. பும்ரா பந்தைத் தொடுவதற்கு முன்பே பவுண்டரி லைனைத் தொட்டதுதான் காரணமாம்!
பலே பாலா, தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது: நாச்சியாரை பாராட்டிய வைரமுத்து

பலே பாலா, தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது: நாச்சியாரை பாராட்டிய வைரமுத்து

நாச்சியார் படம் பார்த்த வைரமுத்து இயக்குனர் பாலாவை பாராட்டியுள்ளார்.

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த நாச்சியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸானது. படம் பார்த்தவர்களால் காத்து ஜி.வி. பிரகாஷ், ஜோதிகாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் நாச்சியார் படத்தை பார்த்துள்ளார்.

தஷ்வந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கலாம்...  ஹாசினி  வழக்கறிஞர்

தஷ்வந்துக்கு இரட்டை ஆயுள் தண்டனை கிடைக்கலாம்... ஹாசினி வழக்கறிஞர்

ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்துக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக ஹாசினி தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார். மேலும் அவருக்கு இரட்டை ஆயுள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் ஹாசினி பெற்றோர் தரப்பில் ஆஜரான கண்ணதாசன் கூறுகையில் நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும் அறிவியல்பூர்வமாக குற்றங்களை நிரூபித்தோம் என்று அவர் தெரிவித்தார்.