Short News

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை: மாலை நிலவரம்!

ஆபரணத் தங்கம் இன்று காலை விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.7 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.2,950 என விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,600 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,000க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.42.80 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.42,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
போதையில் காரை ஓட்டிய இயக்குநர் தலைமறைவு!

போதையில் காரை ஓட்டிய இயக்குநர் தலைமறைவு!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தனது 35வது பிறந்தநாளை கடந்த 20ம் தேதி கொண்டாடியுள்ளார். அப்போது திரையுலக பிரபலங்களுக்கு அவர் தனது வீட்டில் வைத்து பெரிய பார்ட்டி கொடுத்தார். இதில், கலந்து கொண்டுவிட்டு இரவில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இயக்குநர் ரவீந்திரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் தலைமறைவாகி இருப்பதால் அவரை போலீசார் தீவிரமாக தேடிக் வருகின்றனர்.
தூத்துக்குடியில் வீட்டை விட்டு வெளியேற முடியாத பொதுமக்கள்!

தூத்துக்குடியில் வீட்டை விட்டு வெளியேற முடியாத பொதுமக்கள்!

தூத்துக்குடியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக இயல்பு நிலை திரும்பாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
பறக்கும் விமானத்தின் அறிவியல்!

பறக்கும் விமானத்தின் அறிவியல்!

விமானம் என்றாலே பலருக்கு அது பல ரகசியம் அடங்கிய வாகனம் தான். விமானம் குறித்த பல அடிப்படை தகவல்கள்கூட மக்களுக்கு தெரியவில்லை. ஏன் என்றால் விமானம் என்பது மக்களால் எளிதாக அனுக முடியாத நிலையில் இருப்பது தான் இந்த நிலைக்கு காரணம். விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது தெரியுமா? பலருக்க எவ்வளவு என்பது சரியாக தெரிந்திருக்காது விமானங்கள் குறைந்தது 35 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் தான் பறக்கிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more