Short News

ரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..!

ரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..!

குறைந்த விலை பங்குகள் என்றால் அவை எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் அளிப்பதில்லை, அதிக ரிஸ்க் வாய்ந்தவை என்று முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் சில பங்குகள் நீண்ட கால முதலீடாகச் செய்யும் போது அதிக லாபத்தினை அளிக்கும். எனவே இங்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ள, அதிக ரிஸ்க் உள்ள, அதிக லாபம் அளிக்கக் கூடிய பங்குகளை அளித்துள்ளோம்.

பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ரயில்வே ஸ்டேஷன்!

பெண் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ரயில்வே ஸ்டேஷன்!

குஜராத் மாநிலம் காந்தி நகர் ரயில்வே நிலையத்தில் அனைத்து விதமான பணிகளுக்கும் பெண் அதிகாரிகளே தலைமை தாங்குகின்றனர். டிரைன் டிராக்கிங், சிக்னல் செக்கிங் என எல்லா விதமாக பணிகளுக்கும் பெண் அதிகாரிகளே உள்ளனர். எனவே இந்த ரயில்நிலையம் முழுக்க முழுக்க பெண்களின் கட்டிப்பாட்டில் இயங்கும் தளமாக மாறியுள்ளது.
டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் அரசின் வரி சிரமைப்பை விமர்சிக்கும் தொழில் அதிபர்கள்!

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் புதிய வரி சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றியது.மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனத்தை தெரிவித்த நிலையில், தற்போது பிரபல தொழிலதிபர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமேசான் அதிபர் ஜெஃப் பெஸாஸுக்கு அடுத்தப்படியாக பில்கேட்ஸ் இந்த வரி சீர்த்திருத்தை விமர்சித்துள்ளது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு: நீதிமன்றத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போலீஸார்

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்த மக்களுக்கு போலீஸார் இனிப்புகளை வழங்கினர். வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குழந்தை என்றும் பாராமல் ஹாசினியை கொடூரமாக கொன்ற குற்றத்துக்காக இந்த தீர்ப்பை அனைவரும் வரவேற்கின்றனர். தஷ்வந்தை நீதிமன்றத வளாகத்திலிருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.