Short News

தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்தது..!

தொழிற்துறை உற்பத்தியின் வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்தது..!

இந்திய தொழிற்சாலை உற்பத்தி அளவு நவம்பர் மாதத்தில் 8.4 சதவீதம் என்ற 25 மாத உயர்வைத் தொட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில் இதன் வளர்ச்சி 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.தொழிற்சாலை உற்பத்தி, தொழிற்துறை உற்பத்தி குறியீடுக்கு நிகரானது. இதன் வளர்ச்சி நாட்டின் வர்த்தக வளர்ச்சியை எடுத்துக்காட்டக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

'மக்கள் நீதி மய்யம்' 4 தலைமுறை தாங்கும்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கினார். மேலும், என் கட்சியின் கட்டமைப்பு என்னுடன் முடிவது அல்ல, குறைந்தது 3 அல்லது 4 தலைமுறை தாங்கும் என பேசியுள்ளார். மேலும், என்னுடைய கட்சி பேச்சை குறைத்து செயலில் இறங்கும் எனவும் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 
கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

கமல் கட்சி நிர்வாகிகளாக ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல நியமனம்!

இன்று அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்'. என்ற கட்சியை மதுரையில் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டார். மேலும், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் குழுவில் ஐபிஎஸ் அதிகாரி (ஓய்வு) மவுரியா, நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீல, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

கமலுக்கு வாழ்த்து தெரிவிப்பது எனது கவுரவம்- பினராயி!

புதிய கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதை கவுரவமாக கருதுகிறேன் என்று கமலின் 'மக்கள் நீதி மய்ய' அரசியல் பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜனநாயகத்தை கமல் காப்பார் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.