Short News

எஸ்பிஐ-ஐ பின்னுக்கு தள்ளிய கோட்டாக் மஹிந்திரா!

எஸ்பிஐ-ஐ பின்னுக்கு தள்ளிய கோட்டாக் மஹிந்திரா!

கோட்டாக மஹிந்திரா வங்கி மதிப்புமிக்க வங்கிகள் பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கியைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தினைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில், முதல் இடத்தினை தனியார் வாங்கியான எச்டிஎப்சி வங்கியும், மூன்றாம் இடத்தினை எஸ்பிஐ வங்கியும் பிடித்துள்ளது. மேலும், கோட்டாக மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
டாட்டா காட்டிவிட்டு சீனா புறப்பட்டார் மோடி!

டாட்டா காட்டிவிட்டு சீனா புறப்பட்டார் மோடி!

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார் பிரதமர் மோடி. அந்நாட்டில் வுஹான் நகரில் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். இந்த பயணத்தில் டோக்லாம் எல்லையில் சீனா-இந்தியப் படைகளுக்கும் இடையே 73 நாட்களாக நீடித்து எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது
நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர் !

உச்சநீதிமன்றத்தின் புதிய பெண் நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவின் தேர்வுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வார இறுதியில் அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதய நோய்களை குறைக்கும் பிஸ்தா!

இதய நோய்களை குறைக்கும் பிஸ்தா!

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டசத்து கொண்டது. இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும். 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் நல்ல அளவு உள்ளது.