Short News

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!

இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே டாலரின் தேவை சரிந்துள்ளது, பங்குச் சந்தைகளில் உயர்வு ஆகியவை ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.70 ஆகும். கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.80 ஆக இருந்தது.
ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

ஆப்பிள் மியூசிக்கை மிரள வைத்த யூடியூப்!

வரும் 22ம் தேதி புதிய மியூசிக் சேவை ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது யூடியூப் நிறுவனம். ஆப்பிள் மியூசிக் சேவை போன்றவற்றை பின்னுக்குத் தள்ள இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முதற்கட்டமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மெக்ஸிகோ மற்றும் தென்கொரிய நாடுகளில் வரும் என்று தெரிகிறது. மாதக்கட்டணமாக 10 டாலர்கள் வரை வசூலிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 
ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்து தூங்கும்போது நம்ம உயிர் எங்க போகுது தெரியுமா!...

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரையும் எழுப்பக்கூடாது என்று சொல்வார்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அதற்கு காரணம் பல ஆயிரம் கிமீ வேகத்தில் நம் உயிர் உடலிலிருந்து வெளியே சென்று மீண்டும் திரும்புவதனால்தானாம் என்று ஆத்ம சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இப்படி தூக்கத்தில் இருந்து ஒருவரை எழுப்பினால் அவர் மனநலம் பாதிக்ககூட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. 
நமீதாதான் வேணும்: அடம்பிடிக்கும் டிஆர்

நமீதாதான் வேணும்: அடம்பிடிக்கும் டிஆர்

டிஆர் இயக்கவிருக்கும் அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேசப்பட்டு வருகிறதாம். இந்த கதையை தயார் செய்தவுடன் டிஆரின் எண்ணத்துக்கு முதலில் வந்தவர் நமீதாதானாம். எப்படியாவது அவரை கன்வின்ஸ் செய்து இந்த படத்தில் நடிக்க வைத்துவிடவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று அடம்பிடிக்கிறாராம் டிஆர்.