Short News

இந்திய வங்கிகளை டிரை கிளீன் செய்யும் ரிசர்வ் வங்கி..!

இந்திய வங்கிகளை டிரை கிளீன் செய்யும் ரிசர்வ் வங்கி..!

இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் வங்கிகளில் வாராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது.இந்நிலையில் வாராக் கடன் பிரச்சனையை மற்றும் அதன் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்

வோடாஃபோன் போட்டியாகப் புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க ரூ.2000 கேஷ்பேக் அளிக்கும் ஏர்டெல்

இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நெட்வொர்க்கான ஏர்டெல் மோட்டோரோலா மற்றும் லெனோவா ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவித்துள்ளது.இதே போன்று வோடாஃபோன் நிறுவனம் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு 1,500 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகைகளைக் கடந்த சில வாரங்களாக வழங்கி வருகிறது.

மீண்டது ஏர்செல்: நிம்மதி மூச்சு விடும் பயனாளர்கள்!

மீண்டது ஏர்செல்: நிம்மதி மூச்சு விடும் பயனாளர்கள்!

கடந்த 3 நாட்களாக  ஏர்செல் சேவைகள் முடங்கியதால்  வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதியடைந்தனர்.  இந்த நிலையில், ஏர்செல் சேவைகள் தற்போது சீரடைந்துள்ளதாகத் தெரிகிறது.  தங்களுக்கு அழைப்புகள் வழக்கம்போல்  வரத் தொடங்கியுள்ளதாக  ஏர்செல் வாடிக்கையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.9 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,921 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,368 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,670க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.50 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,500 ஆக விற்பனை செய்யப்படுகிறது.