Short News

மும்பையை கலக்கும் டப்பாவாலா-க்களின் அடுத்த திட்டம்!

மும்பையை கலக்கும் டப்பாவாலா-க்களின் அடுத்த திட்டம்!

மும்பையைக் கலக்கி வரும் சுமார் 5000 டப்பாவாலா-க்கள் டிப்பன் பாக்ஸ்களை டெலிவரி செய்து வரும் நிலையில் தற்போது மும்பையில் கூரியர், பார்சலை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளனர். இவர்கள் தினமும் 2 லட்சம் டிப்பென் பாக்ஸ்களை நகரம் முழுவதும் டெலிவரி செய்து வருகின்றனர். இதில் கூரியர், பார்சலை டெலிவரி செய்யும் திட்டம் கிட்டதட்ட முடிவாகிவிடும் என டப்பாவாலா அமைப்பின் தலைவர் சுபாஷ் தாலேகா தெரிவித்துள்ளார்.
விமானப்படையில் சேர தயாராகும் பிரம்மோஸ்!

விமானப்படையில் சேர தயாராகும் பிரம்மோஸ்!

இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஏற்கெனவே ராணுவ மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணையை விமானப்படையில் சேர்க்க ஆயுத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் இருக்கும் மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கமலால் நான்  நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

கமலால் நான் நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

வி.பி.விஜி இயக்கி நடிகர் விவேக் நடித்துள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விவேக், 'பாலக்காட்டு மாதவன்' படம்  நஷ்டமடைந்ததற்கு காரணம், என் படம் ரிலீஸாகும் போது ஒரு பெரிய நடிகரின் படம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்தனர்" என்றார். அன்றைய நாளில் கமலின் 'பாபநாசம்' படம் ரிலீஸானது பற்றிதான் விவேக் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சர்வதேச எல்லை பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி விரிவுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கும் என கருதப்படும் சுரங்கம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணியில் சீனாவின் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளல் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.