Short News

இன்றும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு (ஏப்ரல் 16)!

இன்றும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு (ஏப்ரல் 16)!

பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 4 காசுகள் உயர்ந்து ரூ.76.79க்கு விற்கப்படுகிறது. டீசலின் விலை லிட்டருக்கு 9 பைசாக்கள் அதிகரித்து ரூ.68.76 என விற்பனையாகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலைகள் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
வெயிலுக்காக நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட நடிகை!

வெயிலுக்காக நீச்சல் உடை போட்டோவை வெளியிட்ட நடிகை!

பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆன்ட்ரியா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், அதில் வெயில் காலம் என்று பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
100 ரன்களை தொட்டது சிஎஸ்கே!

100 ரன்களை தொட்டது சிஎஸ்கே!

பெங்களூருவில் நடந்து வரும் 24வது டி20லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணி, சென்னை அணிக்கு 206 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதில் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு 48 ரன்கள் எடுத்து நிதனமாக ஆடி வருகிறார் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.ஸ்கோர்: சென்னை- 113 /4 (13.1 ஓவர்)., பெங்களூரு- 205/8(20ஓவர்)
சசிகலா சிறை சென்றதற்கு டிடிவி தான் காரணம்!

சசிகலா சிறை சென்றதற்கு டிடிவி தான் காரணம்!

சசிகலா குடும்பத்து மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சசிகலா குறித்து திவாகரன் பேசியது என்ன என்பது எனக்குத்தான் தெரியும் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், "சசிகலா சிறை சென்றதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம், 6 மாதத்துக்குள் டி.டி.வி குடும்பத்தினர் தனி மரமாக நிற்பார்கள், தினகரனின் முதல்வர் பதவி ஆசைதான் கட்சி பிளவுக்கு காரணம்" என்று திவாகரன் பகீர் பேட்டியளித்துள்ளார்.