Short News

தொடர்ந்து 6 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை சரிவு..! என்ன காரணம் தெரியுமா..?

தொடர்ந்து 6 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை சரிவு..! என்ன காரணம் தெரியுமா..?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.ஆனால் தற்போது சவுதி, ரஷ்யா உட்படக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தி அளவுகளைக் குறைத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் டிஜிட்டல் நகரம்: அம்பானி பிளான்!

மகாராஷ்டிராவில் டிஜிட்டல் நகரம்: அம்பானி பிளான்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து டிஜிட்டல் தொழில் நகரத்தை அமைக்க  முக்கேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில்  தொடங்கப்பட்டு, வேலைகள் வேகமெடுக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 31 காசுகள் குறைந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை குறைந்துள்ளது ரூபாய் மதிப்பு குறைவுக்கு முக்கியக் காரணமாகும். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.52 ஆகும். கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.21 ஆக இருந்தது.
மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

மாலத்தீவு அதிபருக்கு அடிபணிந்த உச்சநீதிமன்றம்!

அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக போர்கொடி தூக்கிய 12எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது அதனை திரும்ப பெற்றுள்ளது. இதன் மூலம் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 39 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எமர்ஜென்சி நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.