Short News

பலத்த சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

பலத்த சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 275.90 புள்ளிகள் சரிந்து 33,916.75 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 79.35 புள்ளிகள் குறைந்து 10,401.25 புள்ளிகளாக இருந்தது.
மேம்பாலத்தில் தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை!

மேம்பாலத்தில் தொங்க விடப்பட்ட எச்.ராஜா உருவ பொம்மை!

சென்னையின், மைலாப்பூர் ஜி.கே. மூப்பனார் மேம்பாலத்தில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மை தொங்கவிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேம்பாலத்தில் தூக்கி போட்ட அந்த உருவ பொம்மையின் மீது கடுமையான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த உருவ பொம்மையை அகற்றினர்.
புரொஜெக்டர்- ஹோம் தியேட்டர்- கம்பியூட்டர்: ஆல் இன் ஒன்!

புரொஜெக்டர்- ஹோம் தியேட்டர்- கம்பியூட்டர்: ஆல் இன் ஒன்!

ஹோம் தியேட்டர் ஸ்பிக்கர், புரோஜெக்டர், கம்பியூட்டர் என ஆல் இன் ஒன் அம்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது Aurora. வைஃபை வசதியுடன் கூடிய இதில் 300 இன்ச் ஸ்கிரின் மூலம் நமக்கு தேவையான வீடியோவை பார்த்துக்கொள்ள முடியும். 4 கே பிக்சர் குவாலிட்டியை வழங்கும் இதில் அதிரவைக்கும் கேம்களையும் விளையாட முடியும்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பெண்: நாசா சஸ்பென்ஸ்!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் பெண்: நாசா சஸ்பென்ஸ்!

செவ்வாய் கிரத்தில் முதலில் காலடி எடுத்து வைக்கப்போவது நிச்சயம் ஒரு பெண்ணாக தான் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இதுவரை விண்வெளிக்கு ஆண்களே அதிகம் அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் வரும் காலங்களில் பெண் விண்வெளி வீராங்கனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என நாசாவின் தலைமை விண்வெளிப் பயிற்சியாளர் allison mclntyre கூறியுள்ளார்.