Short News

மலேசியாவில் ஜிஎஸ்டிக்கு பதிலாக எஸ்.எஸ்.டி!

மலேசியாவில் ஜிஎஸ்டிக்கு பதிலாக எஸ்.எஸ்.டி!

மலேசியாவில் ஜிஎஸ்டி வரிக்கு மாற்றாக எஸ்.எஸ்.டி எனப்படும் புதிய வரிமுறை அந்நாட்டு அரசு வருகிற ஜூன் மாதம் முதல் அமல்படுத்துகிறது. இருப்பினும் எஸ் எஸ்டி வரியை அமல்படுத்துவதில் பல்வேறு கள சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மலேசிய அரசு இது குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ,  திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி நினைவேந்தல் பேரணி: வைகோ, திருமுருகன் காந்தி கைது!

தடையை மீறி சென்னை மெரினாவில் குவிந்த இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி நடத்திய வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த பேரணி காரணமாக நேப்பியார் பாலம், பாரதிசாலை உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பையை வீட்டிற்கு அனுப்பிய டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மும்பை தோல்வியை தழுவியதை அடுத்து, ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைய தகுதி இழந்தது. இதையடுத்து, டீ 20 லீக் தொடரில் இருந்து மும்பை வெளியேறியது. இது மும்பை ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வழக்கம்போல அந்த அணியில் இருந்து ரிஷத் பண்ட் 44 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். விஜய சங்கர் 30 பந்துகளுக்கு 43 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் ஹர்ஷல் படேல், சந்தீப், அமித் மிஸ்ரா தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.