Short News

பிட்காயினை தடை செய்த ஆசிய நாடுகள் எவை.!

பிட்காயினை தடை செய்த ஆசிய நாடுகள் எவை.!

கிரிப்டோகரன்சி ( பீட்காய்ன்) வர்த்தகத்தை தடை செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே தயக்கம் காட்டிய நிலையில் ஆசியவின் இருக்கும் நாடுகள் மற்றும் இதர நாடுகள் துணிச்சலாக பிட்காய்ன் வர்த்தகத்தை தடை செய்துள்ளது. இந்தியா, வங்கதேசம், வியட்நாம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகள் தானாக முன்வந்து கிரிப்டோகரன்சி வர்த்தம் என்பது சட்டவிரோதம் என அறிவித்துள்ளது.
இன்று ஜில் ஜில் மழைக்கு வாய்ப்பு!

இன்று ஜில் ஜில் மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் இன்று வழக்கத்தைவிட 40-41 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய திண்டுக்கல் செல்வி!

ரயிலில் 40 கிலோ கஞ்சா கடத்திய திண்டுக்கல் செல்வி!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஒரு ரயிலிலிருந்து இறங்கி வரும் பயணிகளிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெண், 40 கிலோ கஞ்சா மூட்டைகளை ஒரு ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். விசாரணையில், அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் செல்வி என்பதும் தெரிய வந்தது. கஞ்சா கடத்தல் தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

மனைவியின் ஆசையை ஒன் மோர் சிக்ஸ் அடித்து நிறைவேற்றிய தோனி!

நேற்று பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே பரபரப்பாக நடந்த போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது தோனியிடம் அவரது மனைவி சாக்ஷி இன்னொரு சிக்ஸ் அடிக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அடுத்த ஓவரில் தோனிக்கு ஸ்ட்ரைக் கிடைக்கும் போது அவர் அதை சிக்ஸாக மாற்றி தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.