Short News

இன்றைய (மே-16) கரன்சி நிலவரம்!

இன்றைய (மே-16) கரன்சி நிலவரம்!

அமெரிக்கா (டாலர்) - ரூ.68.48, ஐரோப்பா (யூரோ) - ரூ.80.3301, பிரிட்டன் (பவுண்டு) - ரூ.91.4983, ஆஸ்திரேலியா(டாலர்) - ரூ.50.779, சிங்கப்பூர் (டாலர்) - ரூ.50.6777, ஹாங்காங் (டாலர்) - ரூ.8.6835, ஜப்பான் (யென்) - ரூ.0.6153, மலேசியா (ரிங்கட்) - ரூ.17.1629, குவைத் (தினார்) - ரூ.224.7026, ஓமன் (ரியால்) - ரூ.176.3682, கத்தார் (ரியால்) - ரூ.18.5595 சவுதி (ரியால்) - ரூ.18.1035, தாய்லாந்து (பாத்) - ரூ.2.114.
இந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

இந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?

12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப்
பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

ரஜினி வரும் தேர்தலில் 'CM' நெக்ஸ்ட் 'PM' என புகழ்ந்த நடிகர்!

சின்னத்திரையின் மூலம் பிரபலமாக தற்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளவர் நடிகர் ஜீவா. இவர் நடிகர் ரஜினியின் ஆதரவாளராகவும் உள்ளார். இந்நிலையில், இவர் ரஜினி குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர் என கூறியுள்ளார். 
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.