Short News

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் உருவானது எப்படி?

அமெரிக்கா – சீனா வர்த்தக போர் உருவானது எப்படி?

கடந்த மாதம் முதல் அமெரிக்கா - சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உருக்கு, அலுமினியம் இறக்குமதிக்கு 25 முதல் 10 சதவீதம் வரை வரி விதித்து, வர்த்தக போரை தொடங்கி வைத்தார். இதையடுத்து, சீனா அரசு தனது நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 1,300 பொருட்களுக்கு, 25 % சுங்க வரி விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பயணத்தின் கதைகள்: பலாவான் தீவு!

பில்லிபைன்ஸ் நாட்டில் இருக்கும் பலாவான் தீவு தெளிவான நீர் மற்றும் உறுதியான மலைகளால் ஆனது. மனிதர்கள் அதிகம் செல்லாத தீவுகளில் ஒன்றாக கருதப்படும் இங்கு சின்ன சின்ன மலைகள் அதிகம் காணப்படுகின்றன. புகைப்பட நயம் உள்ளவர்களுக்கு இந்த தீவு சொர்க பூமியாக இருக்கும், காரணம் இயற்கையின் வண்ணத்தை தன்னுள் தாங்கி இருக்கிறது பலாவான்.
உலகின் அதிவேக ஜெட் எஞ்சின் கப்பல்!

உலகின் அதிவேக ஜெட் எஞ்சின் கப்பல்!

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று, போயிங் 747 விமானத்தின் எஞ்சின் பொருத்தப்பட்ட உலகின் அதிவேக படகை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படகு போப் ஆண்டவர் பெயரில் பிரான்சிஸ்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படகு அர்ஜென்டினா மற்றும் உருகுவே இடையில் சேவையில் உள்ளது. இந்த படகில் 1,000 பயணிகள், 150 கார்களுடன் மணிக்கு 107.4 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

வரி உயர்வு காரணமாக கார்களின் விலை உயரும் அபாயம்!

மே மாதம் முதல் புதிய டீசல் காருக்கான வரி 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதனால் காரின் விலை அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் டீசல் கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உடனடியாக காரை வாங்கி விடுங்கள். இல்லையென்றால் அடுத்த மாதம் முதல் புதிய கார்களை பதிவு செய்வதற்கான சட்ட விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.