Short News

வால்மார்ட்டால் விவாசயிகளுக்கு கிடைக்கபோகும் நன்மை!

வால்மார்ட்டால் விவாசயிகளுக்கு கிடைக்கபோகும் நன்மை!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட்டை அமெரிக்க வால்மார்ட் நிறுவனம் 77 % பங்குகளை 16 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிலயைில், அமேசான், வால்மார்ட் சுமார் 28 நாட்டில் விவசாயிகளுடன் இணைந்து மக்களுக்கு நேரடியாகக் காய்கறிகள், உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வால்மார்ட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
விமானப்படையில் சேர தயாராகும் பிரம்மோஸ்!

விமானப்படையில் சேர தயாராகும் பிரம்மோஸ்!

இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. ஏற்கெனவே ராணுவ மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணையை விமானப்படையில் சேர்க்க ஆயுத்தப் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று ஒடிசா மாநிலம் சந்திப்பூர் பகுதியில் இருக்கும் மையத்தில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கமலால் நான்  நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

கமலால் நான் நஷ்டமடைந்தேன்- விவேக் பரபர பேச்சு!

வி.பி.விஜி இயக்கி நடிகர் விவேக் நடித்துள்ள 'எழுமின்' படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய விவேக், 'பாலக்காட்டு மாதவன்' படம்  நஷ்டமடைந்ததற்கு காரணம், என் படம் ரிலீஸாகும் போது ஒரு பெரிய நடிகரின் படம் 15 நாட்களுக்கு முன்கூட்டியே தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்தனர்" என்றார். அன்றைய நாளில் கமலின் 'பாபநாசம்' படம் ரிலீஸானது பற்றிதான் விவேக் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

தங்கச் சுரங்கம் யாருக்கு சொந்தம்: மோதிக்கொள்ளும் சீனா, இந்தியா!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சர்வதேச எல்லை பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை சீனா அத்துமீறி விரிவுபடுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இருக்கும் என கருதப்படும் சுரங்கம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. சுரங்கத்தை விரிவுப்படுத்தும் பணியில் சீனாவின் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளல் மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது.