Short News

வாடகை கார் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஜூம்கார் அறிமுகம் செய்யும் ஜேப் சப்ஸ்கிரைப்..!

வாடகை கார் பயன்படுத்துவதை ஊக்குவிக்க ஜூம்கார் அறிமுகம் செய்யும் ஜேப் சப்ஸ்கிரைப்..!

சொந்தமாகக் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்டி செல்லக்கூடிய சேவை அளிக்கும் ஜூம் கார் நிறுவனம் ஜேப் சப்ஸ்கிரைப் என்ற புதிய சேவையினைப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. ஜூம் காரினை ஒரு நாள், இரண்டு நாள் என ஒரு வாரம் வரை எடுத்து பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் தங்களுக்கு விருப்பான காரினை மாத கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுதக்கூடிய சேவை தான் இந்த ஜூம் கார்.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாகிச்சூடு!

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாகிச்சூடு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி எல்லை பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, அந்த பகுதிகளில் இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்து வருவதாக தகவல்.
அஜித்-அர்ஜூன் கூட்டணி: வெற்றி பெறுமா.!

அஜித்-அர்ஜூன் கூட்டணி: வெற்றி பெறுமா.!

மங்காதா படத்தில் அஜித் மற்றும் அர்ஜூன் கூட்டணிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்தனர். விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தை தொடர்ந்து விசுவாசம் படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இந்த படத்தில் அர்ஜூன் தற்போது சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வில்லனாக அர்ஜூன் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு இதுவரை படக்குழு பதில் கூறவில்லை.
ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

ஐஎப்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: திண்டுக்கல் கார்த்திகாயினி சாதனை!

இந்திய வனப்பணி (ஐஎப்எஸ்) தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டது. இந்த தேர்வு முடிவுகள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அளவில் நடைபெற்ற ஐஎப்எஸ் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகாயினி 12ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.