Short News

தனுஷ் படத்தை பார்த்து கொந்தளித்த பிரபலங்கள்!

தனுஷ் படத்தை பார்த்து கொந்தளித்த பிரபலங்கள்!

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படம் தி ஹவுஸ் தட் ஜாக் பில்ட். இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படம் திரையிடப்பட்ட சில நிமிடங்களிலேயே 100 பிரபலங்கள் வெளிநடப்பு செய்தனர். சின்ன குழந்தைகள், பெண்களை ஈவு இரக்கமே இல்லாமல் கொலை செய்வது இது எல்லாம் ஒரு படமா என கொந்தளித்துள்ளனர். இந்த படத்தை முழுமையாக பார்த்தவர்கள் படம் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். 
வரைபடத்தில் மாயமான 30 மீனவ கிராமங்கள்!

வரைபடத்தில் மாயமான 30 மீனவ கிராமங்கள்!

மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் துறைகள் கடற்கரை மண்டல ஒழுங்காற்று வரையறைக்காக கடற்கரை மேலாண்மை வரைவு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். இதில் 30 மீனவ கிராமங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் அமைப்பதற்காக தங்களை வெளியேற்றுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
என்னை விட்டுவிடுங்கள் இந்திய ராணுவ வீரர் கடிதம்!

என்னை விட்டுவிடுங்கள் இந்திய ராணுவ வீரர் கடிதம்!

என்னை விட்டுவிடுங்கள் என இந்திய ராணுவத்திற்கு சந்து சவான் என்ற வீரர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின்போது பாகிஸ்தான் ராணுவத்தின் சிக்கிய அவர், பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்திய ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையை தொடந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உ.பி.யில் இருக்கும் ராணுவ பள்ளியில் இருக்கிறார்.
மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்புக்கு ரிசல்ட்!

மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்புக்கு ரிசல்ட்!

மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. dge.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ, மாணவிகளும், 36,649 தனித்தேர்வர்களும் எழுதியது குறிப்பிடத்தக்கது.