Short News

சம்பளம் வாங்காமல் நடித்த 4 நடிகைகள்!

சம்பளம் வாங்காமல் நடித்த 4 நடிகைகள்!

இயக்குனர் கிராந்தி பிரசாத் சந்தோஷத்தில் கலவரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இவர்கள் யாருமே சம்பளம் வாங்கவில்லை. நாங்கள் கொடுத்தும் அதை மறுத்துவிட்டனர் என இயக்குனர் கூறியுள்ளார். இவர்களை போலவே மற்றவர்களும் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
ஜூலை 20 முதல் லாரிகள் ஸ்டிரைக்!

ஜூலை 20 முதல் லாரிகள் ஸ்டிரைக்!

டீசல் விலை, சுங்கக் கட்டணம் உள்ளிட்டவற்றைக் குறைக்க வலியுறுத்தி, வரும் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் பள்ளியில் 'ஏ' ஜோக் பேசிய கில்மா யாஷிகா!

பிக்பாஸ் பள்ளியில் 'ஏ' ஜோக் பேசிய கில்மா யாஷிகா!

பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் நேற்று முதல் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த பிக்பாஸ் போன்று பள்ளி மாணவ, மாணவியர் போன்று நடித்து வருகின்றனர். இதில் ரித்விகா தான் ஹெட் மாஸ்டர். பள்ளி சீருடையில் கில்மா யாஷிகா ஏ ஜோக் பேசியுள்ளார். இதில் ஷாரிக் கிஸ் பண்ணினான் என்று யாஷிகா கூறியுள்ளார். இதை கேட்ட பாலாஜியும், பொன்னம்பலமும் நொந்து விட்டனர்.
SPK நிறுவனத்தில் 3ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

SPK நிறுவனத்தில் 3ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு!

'ஆபரேஷன் பார்க்கிங் மனி' என்ற பெயரில் சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று இன்னும் சில முக்கியமான ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more