Short News

4 கோடிப் பேர் பார்த்த 'ஆளப்போறான் தமிழன்...'!

4 கோடிப் பேர் பார்த்த 'ஆளப்போறான் தமிழன்...'!

விஜய் நடித்த 'மெர்சல்' வெற்றிப் படத்தில் வரும் 'ஆளப்போறான் தமிழன்...' பாடல் மேலு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. 4 கோடிக்கும் அதிகமானோர் இந்தப் பாடலை யூடியூப் வழியாக இதுவரை பார்த்துள்ளனர். கவிஞர் விவேக்கின் வரிகளில் கைலாஷ் கேர், சத்யா பிரகாஷ், தீபக், பூஜா இணைந்து பாட, இந்தப் பாடலுக்கு இசை கோர்த்திருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரெஹ்மான்.
உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் அன்லாக் செய்வது எப்படி?

இந்திய மொபைல்சந்தையில் தற்சமயம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டது, குறிப்பாக சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால் குறிப்பிட்ட சில வழிமுறைகள் மூலம் அன்லாக் செய்ய முடியும், ஆனால் மொபைலில் உள்ள அனைத்து தரவுகளும் அழிந்துவிடும்.

புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

புவனேஷ்வர்குமார் ஆரம்பித்தது எப்படி?

இந்திய அணியில் தற்போது அசைக்க முடியாது பந்துவீச்சாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் உ.பி மாநிலத்தை சேர்ந்த புவனேஸ்வர்குமார்.2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கிய புவனேஷ் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.சமீபத்தில் முடிந்த ஐபிஎஸ் போட்டியைஅவருக்கு சாதகமாக மாறிய புவனேஷ் 2017 ஆம் ஆண்டிற்கான பர்பிள் தொப்பியையும் தனதாகினார்.
தங்கம் விலை இன்றும் குறைவு!

தங்கம் விலை இன்றும் குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.14 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,922 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,376 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,690க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.