Short News

நடிகர் தனுஷ் பேனர் கிழிப்பு: கத்தியுடன் மோதல்!

நடிகர் தனுஷ் பேனர் கிழிப்பு: கத்தியுடன் மோதல்!

சென்னை அருகே பட்டாபிராமில் நடிகர் தனுஷ் பேனரை சேதப்படுத்தியதாக கத்தி, உருட்டுக்கட்டையுடன் மோதல் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றிரவு பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்பேனரை சேதப்படுத்தியதாக ஏற்பட்ட மோதல் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல்!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அரசுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அல் நுஸ்ரா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. டமாஸ்கஸின் தெற்குப் பகுதிகளில் இத்தீவிரவாதிகளின் நடமாட்டம் பெரும்பாலும் இருப்பதால், அங்கு கடந்த 2 நாட்களாக விமானப்படைத் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தங்கம் விலை சிறிது குறைவு!

தங்கம் விலை சிறிது குறைவு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,994 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,952 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,450க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.00 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

200 தாண்டிய தோனியின் ஸ்ட்ரைக் ரேட்!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாத்தில் குதித்தனர். 34 பந்துகளை எதிர்கொண்ட தோனி 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 70 ரன்கள் குவித்தார். மேலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி அதிரடி சிக்ஸுடன் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரி 205.88 இருக்கிறது.