Short News

அரசியலுக்கு வந்தாலும் நான் தொடர்ந்து நடிப்பேன் - கமல்!

அரசியலுக்கு வந்தாலும் நான் தொடர்ந்து நடிப்பேன் - கமல்!

முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்துள்ளார். தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கட்சிப் பெயரை பதிவு செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது, அரசியலுக்கு வந்தாலும் திரைப்படங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன், தீவிரமான அரசியலுக்கு வந்த பிறகே நடிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து யோசிப்பேன்" என்றார்.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் எவ்வளவு தெரியுமா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் எவ்வளவு தெரியுமா?

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் சுமார் 4.6 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடனை குறைக்க மத்திய அரசின் சிறப்பு குழு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடன் சுமையால் சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது.
அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளை அதிகரிக்க செய்கிறது. இதற்கு இந்தியா முதல் மாலத்தீவுவரை உதாரண சின்னங்களாக இருக்கின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு மாலத்தீவு அதிபருக்கு ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி என்பதை புவனேஷ்வர்குமார் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தை குறைத்து பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் ரன் குவிக்க திணறுவார். மேலும் அப்போது சரியான நீளத்தில் வீசப்படும் பந்துகள் அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தொடர்ந்து இதனை கடைபிடிக்கும்போது விக்கெட்கள் சரிய வாய்ப்பு உள்ளது.