Short News

படமாகும் ரீல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு!

படமாகும் ரீல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கடந்த 2004 ஆண்டில் ஹெலிகாப்டர் வெடித்து உயிரிழந்தார். இந்நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது. இந்தப் படம் 4 மொழிகளில் உருவாகவுள்ளது. தெலுங்கு சினிமாவில் இவரை அடுத்த சாவித்ரி என்றே அழைத்தது வந்தது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

வர்த்தக அமைப்பில் அமெரிக்கா மீது இந்தியா புகார்!

இறக்குமதி வரியை உயர்த்திய அமெரிக்காவின் நடவடிக்கை எதிர்த்து தெரிவித்து உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட உலகோகங்களின் வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதாகவும், இது பெரும் சரிவுக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

காஷ்மீரில் மோடி வருகையால் இன்டர்நெட் சேவை நிறுத்தம்!

நேற்று பிரதமர் மோடி அரசு திட்டத்தை திறந்து வைக்க காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தந்தார். அவரது காரணமாக பாதுகாப்புக்காக காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் காஷ்மீரில் இருக்கும் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிரதமர் வருகை காரணமாக பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
காஷ்மீரில் 4 பேர் படுகொலை!

காஷ்மீரில் 4 பேர் படுகொலை!

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றிவலைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள் எனவும் இந்திய ராணுவம் கூறியிருக்கிறது.