Short News

“இம்சை அரசன் 24ம் புலிகேசி' யில் நடிக்க முடியாது!

“இம்சை அரசன் 24ம் புலிகேசி' யில் நடிக்க முடியாது!

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த‘இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் கடந்த 2006ல் வெளியாகி ஹூட்டானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2ம் பாகமான ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி' கடந்த 2016ல் தொடங்கப்பட்டது. பின்னர் சில நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது, இந்நிலையில்,இந்த படத்தில் இனி நடிக்கவே முடியாது என்றுக்கூறி நடிகர் சங்கத்துக்கு வடிவேலு கடிதம் அனுப்பிவிட்டார்.
கஞ்சா கடத்தலை தவிடுபொடியாக்கிய ஆட்டோ டிரைவர்!

கஞ்சா கடத்தலை தவிடுபொடியாக்கிய ஆட்டோ டிரைவர்!

சென்னையில் 3 பேர் 40 கிலோ கஞ்சாவுடன்ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளனர். இதனையடுத்து ஆட்டோவில் கஞ்சா வைத்திருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுனர் அவர்களை சாமர்த்தியமாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதில் 2 பேர் கஞ்சாவுடன் தப்பி ஓடிவிட, திண்டுக்கல் செல்வி மட்டும் சிக்கியுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாமர்த்தியமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
104 நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து!

104 நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து!

கொல்கத்தாவில் இன்று நடந்த ஐசிசியின் செயற்குழு கூட்டத்தில் 104 நாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கு, டி20 அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் டி20 லீக் போட்டிகளுக்கு ஆதரவு பெருகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுளளது. இதில், இந்தியா உள்பட 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர்த்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், நேபாளம் உள்ளிட்ட 18 நாடுகளுக்கு டி-20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ. வங்கி மோசடி: சிவசங்கரன் வீட்டில் சிபிஐ ரெய்டு!

ஐடிபிஐ. வங்கி மோசடி: சிவசங்கரன் வீட்டில் சிபிஐ ரெய்டு!

ஆக்‌ஷெல் சன்ஷைன் நிறுவனர் சிவசங்கரன் சமீபத்தில் ஐடிபிஐ வங்கியில் ரூ.600 கோடி மோசடி செய்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக சிவசங்கரன் மீது குற்றச்சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இன்று அவரது வீடு, அலுவலம் மற்றும் அவருக்கு சொந்தமான 50 இடங்களில் 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.