Short News

"கருணாநிதி மறைவு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு!"

"கருணாநிதி மறைவு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு!"

கருணாநிதியின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை: "தான் முதல்வராக இருக்கும் போது தமிழ் சினிமாவின் நலனுக்காக பல நலத் திட்டங்களை செயல்படுத்தினார். கலை உலகிலும் திரை உலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை. அவரது இழப்பு தமிழகத்துக்கும் திரை உலகிற்கும் மாபெரும் பேரிழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தியடையவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்."
கள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்!

கள்ள ஓட்டு விவகாரத்தில் அரசியலில் குதிக்கும் விஜய்!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் திரைப்படம் கதை கசிந்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர், தனது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக அரசியலில் குதித்து, கலக்கும் கதைகளமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இதனை உறுதி செய்ய முடியாத தகவல் தான். வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகிறது.
வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்!

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கர்நாடக, தமிழக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை குறையும் என்றும் மத்திய, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா!

கேரள பேரிடர்: ரூ.10 லட்சம் வழங்கிய நயன்தாரா!

கனமழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள  கேரளாவுக்கு நடிகை நயன்தாரா பத்து  லட்சம் நிதியுதவி செய்துள்ளார். வரலாறு காணாத கனமழையால்  ஸ்தம்பித்துள்ள கேரள மாநிலத்திற்கு சினிமா  பிரபலங்கள், பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து  நிதியுதவி செய்து வருகின்றனர்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more