Short News

ஓவர் பில்டப் தரும் 'அருவி'!

ஓவர் பில்டப் தரும் 'அருவி'!

'அருவி' படம் மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இவர் ஒரே படத்தில் தன் நடிப்பில் தூள் கிளப்பினார். இதனால் தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர். இதில், அவரை தேடி வந்த சுமார் 150 பட வாய்ப்புகளை அதிதி பாலன் ஏற்க மறுத்துள்ளார். மேலும், தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம்.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் பவுலிங்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் பவுலிங்!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது. ஏற்கெனவே இறுதிசுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்ட சூழ்நிலையில், இன்றை போட்டியில் வெற்றிபெறும் அணி அடுத்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன் மோதவிருக்கிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
குறட்டையை குறைக்க ஒரு ஜாலியான டிப்ஸ்!

குறட்டையை குறைக்க ஒரு ஜாலியான டிப்ஸ்!

குறட்டை விடுபவர்கள் தங்களை மட்டுமல்லாமல், தங்களுடைய துணைவர்களையும் பாதிக்கின்றனர்.ஆண் பெண் யாராக இருந்தாலும் குறட்டை விடுவது இருவருக்கும் வரும் பிரச்சனையாக அமைகின்றது.இந்த குறட்டையை குறைக்க நாள்தோறும் ஒரு பாடலை பாட வேண்டும். அவ்வாறு பாடும் போது வாயில் இருக்கும் தசைகள் பராமரிக்கப்படும் மற்றும் ஆஸ்துமா தொல்லை வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
அடர்த்தியாக முடி வளர சில டிப்ஸ்!

அடர்த்தியாக முடி வளர சில டிப்ஸ்!

தலை முடி அதிகமாக வளர வாரம் ஒரு முறை வெண்ணெயை தலைக்கு தடவி 1 - 2 மணி நேரம் கழித்து குளித்தால் அதிக அடர்த்தியுடன் முடி வளரும். கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இரண்டையும் ஒன்றாக அரைத்து அந்த கலவையுடன் தயிர் சேர்த்து தலையில் தடவி பின்னர் 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.