Short News

காதலருடன் நெருக்கமான போட்டோவை வெளியிட்ட எமி!

காதலருடன் நெருக்கமான போட்டோவை வெளியிட்ட எமி!

நடிகை எமி ஜாக்சன் தற்போது ஒரு அமெரிக்க சூப்பர்கேர்ள் சீரிஸில் நடித்து வருகிறார். இதனால் அவர் இந்திய படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். மேலும், அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
கேரள முதல்வரை சந்திக்க மறுத்த மோடி!

கேரள முதல்வரை சந்திக்க மறுத்த மோடி!

பிரதமர் மோடியை சந்திக்க 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் 3 முறை முயற்சித்திருந்தார். ஆனால் நேரம் ஒதுக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்கு பினராயி விஜயன் தலைமையிலான அனைத்து கட்சி குழு நேரம் கேட்டிருந்தது. இந்த முறையும் பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை.
பெங்களூவில் ஒழுங்காற்றுக் குழு தலையகம்!

பெங்களூவில் ஒழுங்காற்றுக் குழு தலையகம்!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு பரிந்துரை செய்த திருத்தங்களுடன் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலையகம் பெங்களூரு நகரில் இருந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையகம் டெல்லியில் அமைய வேண்டும் என தமிழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம்!

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது மக்கள் நீதி மய்யம்!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்டமாக கட்சிக்கான சின்னம் ஒதுக்கப்படும். தேர்தலில் பெரும் வாக்குகளை பொருத்தே கட்சியை அங்கிகரிக்கும் முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கும்.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more