Short News

நெட்டில் தெறிக்க விடும் ஜூலி மீம்ஸ்!

நெட்டில் தெறிக்க விடும் ஜூலி மீம்ஸ்!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலியை திட்ட ஆள் இருந்தாலும் அதே சமயத்தில் அவரை ஆதரிக்கவும் சமூக வலைதளங்களில் ஆட்கள் உள்ளனர். இதில், மீம்ஸ் கிரியேட்டர்கள் போடும் ஜூலி மீம்ஸ் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். இதில் ஜூலியை திட்டி மீம்ஸ் போட்டாலும் அதே சமயத்தில் அவரை ஆதரித்தும் சில மீம்ஸ் போட்டு தெறிக்க விடுகின்றனர்
புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

புரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி!

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்தது. அவரது வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது
எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

எஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்

செய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எஸ்வி சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், எஸ்வி சேகர் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
”பாஜகவுடன் ஜெகன்மோகன் கூட்டு!”

”பாஜகவுடன் ஜெகன்மோகன் கூட்டு!”

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பாரதிய ஜனதா கட்சியுடன் ரகசிய கூட்டு வைத்துள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மோடியுடன் சேர்ந்துகொண்டு ஆந்திர மாநிலத்தில் முழு அடைப்பு நடத்தியதன் மூலம் ஆந்திராவுக்கு எதிர்க்கட்சிகள் அநீதி இழைத்துள்ளதாகவும் நாயுடு கூறியுள்ளார்.