Short News

கேன்ஸ் விழாவில் மேலாடை இல்லாமல் வந்த நடிகை!

கேன்ஸ் விழாவில் மேலாடை இல்லாமல் வந்த நடிகை!

71-வது கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல், கடந்த மே 8-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த விழாவுக்கு வந்த ஹாலிவுட் நடிகை கெண்டால் ஜென்னெர் மேலாடை இல்லாதது போன்ற படுகவர்ச்சியான ஆடையை அணிந்து வந்தார். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

இன்று தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றை விட ஒரு கிராமுக்கு ரூ.8 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,965 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,720 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.31,130க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.43.20 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.43,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மனைவியை பாராட்டிய கோலி!

மனைவியை பாராட்டிய கோலி!

தனது மனைவி எப்போதுமே சரியான முடிவுகளை எடுப்பவர் என கிரிக்கெட் வீரர் விராட்கோலி, அனுஷ்கா சர்மாவை புகழ்ந்துள்ளார். என்னுடைய கேப்டன் என அனுஷ்காவை புகழ்ந்துள்ள கோலி, வெற்றியிலும், தோல்வியிலும் அவர் என் பக்கம் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். முக்கியமான முடிவுகளை எடுக்க அவர் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்வும் எனவும் கூறியுள்ளார்
ஸ்டெர்லைட் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

ஸ்டெர்லைட் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு வீசி முயற்சி செய்து வருகின்றனர். இதனையடுத்து கண்ணீர்ப் புகைக் குண்டு வீசிய வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர்.