Short News

கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா அதிரடி தாக்கு!

கர்நாடக காவியின் தூதுவர் ரஜினி- பாரதிராஜா அதிரடி தாக்கு!

தமிழன் அல்லாத கர்நாடக காவியின் தூதுவர் நடிகர் ரஜினிகாந்த் என்று இப்போதுதான் தெரிகிறது என்று இயக்குநர் பாரதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள், உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது என ரஜினி குறித்து பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்கா: காதலர் மனைவியை கொல்லத் திட்டமிட்ட இந்திய நர்ஸ்!

அமெரிக்காவின் இல்லினாய் மாநிலத்தில் உள்ள லயோலா மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரியும் டினா ஜோன்ஸ், அதே மருத்துவமனையைச் சேர்ந்த திருமணமான டாக்டரைக் காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த டாக்டரின் மனைவியைக் கொல்ல கூலிப்படை ஒன்றை ஆன்லைன் மூலம் நாடியுள்ளார் டினா. இத்தகவலை அறிந்த போலீசார், டினாவைக் கைது செய்தனர். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் டினா.
இஸ்ரேலிய ராணுவ வீரர் நடத்திய தாக்குதல்: 4 பேர் பலி!

இஸ்ரேலிய ராணுவ வீரர் நடத்திய தாக்குதல்: 4 பேர் பலி!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரர் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். தங்களது நிலங்களை மீண்டும் தங்களுக்கே வழங்கிட கோரி பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் போராட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய இஸ்ரேலை சேர்ந்தவன் 4 பேரை சுட்டுக்கொன்றான்.
மூன்று சதம்: வாட்சன் சாதனை!

மூன்று சதம்: வாட்சன் சாதனை!

நேற்று புனேவில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன் சதம் விளாசினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வாட்சன் 51 பந்துகளில் சதம் விளாசினர். இதன் மூலம் டி20 லீக் போட்டியில் மூன்று சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வாட்சன் படைத்துள்ளார்.