Short News

சென்னையில் அடுத்த மாதம் பெரிய ஸ்டூடியோ திறப்பு விழா!

சென்னையில் அடுத்த மாதம் பெரிய ஸ்டூடியோ திறப்பு விழா!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னை அருகே பையனூரில் 15 ஏக்கர் அளவில் பிரமாண்ட ஸ்டூடியோ அமைக்கப்பட்டு வருகிறது இந்த ஸ்டூடியோ அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.6 கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய ஸ்டூடியோவாக கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோ திறப்பு விழா ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் பலி!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிபா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மூளைச்சாவு நிலை ஏற்படும் பின்னர் உயிரிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நிபா வைரஸ் காய்ச்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய ராசிபலன்!

இன்றைய ராசிபலன்!

ஒவ்வொரு ராசிக்குமான ராசிபலன்களின் விவரங்கள் பின்வருமாறு: மேஷம்-தெளிவு; ரிஷபம்-களிப்பு; மிதுனம்-சினம்; கடகம்-அசதி; சிம்மம்-பரிவு; கன்னி-பாசம்; துலாம்-நிறைவு; விருச்சிகம்-வரவு; தனுசு-லாபம்; மகரம்-நலம்; கும்பம்-பக்தி; மீனம்-மறதி... ராசிக்கேற்ற பலன்கள் கிடைக்க அனைவரையும் வாழ்த்துகிறோம்!
இன்றைய பஞ்சாங்கம்!

இன்றைய பஞ்சாங்கம்!

விளம்பி ஆண்டு, வைகாசி 7; பிறை: வளர்பிறை; திதி: சப்தமி திதி மறுநாள் பின்னிரவு 2.27 வரை பிறகு அஷ்டமி; நட்சத்திரம்: ஆயில்ய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.26 வரை அதன் பிறகு மகம்; யோகம்: சித்தயோகம்; சூலம்: கிழக்கு; ராகுகாலம்: மாலை 04:30 முதல் 06:00 வரை; எமகண்டம்: மதியம் 12:00 முதல் 01:30 வரை; நல்ல நேரம்: காலை 6.30 - 7.30; மாலை 4.30 - 5.30