Short News

சூர்யா ஹீரோயினை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

சூர்யா ஹீரோயினை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சமீரா ரெட்டி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகவில் களமிறங்கும் பாஜக பிரச்சார பீரங்கி யோகி!

கர்நாடகவில் களமிறங்கும் பாஜக பிரச்சார பீரங்கி யோகி!

மே 12ம் தேதி நடக்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சார களம் தற்போது களைக்கட்ட ஆரம்பித்துள்ளது. இதில் பாஜக கட்சி தேசிய பிரபலங்களை களமிறக்கி வருகிறது. இதில் முக்கியமாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 7 முதல் 10 நாள் வரை பிரச்சாரம் செய்யவுள்ளார். இதில் 200 தொகுதிகள் வரை பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டரில் மக்கள் குறைகளை தீர்த்த அமைச்சர்!

ட்விட்டரில் மக்கள் குறைகளை தீர்த்த அமைச்சர்!

சென்னை சென்ட்ரலில் இருந்து பார்க் டவுன் வரை செல்லும் வழியில் மின் விளக்குகள் ஏதுமில்லாமல் இருட்டாக இருப்பதாக ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அக்குறைகளை சரி செய்து மின்விளக்குகள் எரியும் படங்களுடன் அந்த நபருக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சரின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.
புரோக்கர் பேராசிரியை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

புரோக்கர் பேராசிரியை விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!

கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இன்று காலை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது நண்பரான தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய பின் கைது செய்யப்பட்டார்.