Short News

உலகின் ஸ்ட்ராங் மேன் ஆன ‘கேம் ஆஃப் திரோன்ஸ்' நடிகர்!

உலகின் ஸ்ட்ராங் மேன் ஆன ‘கேம் ஆஃப் திரோன்ஸ்' நடிகர்!

கேம் ஆஃப் திரோன்ஸ் தொடரின் மூலம் பிரபலமானவர் ஹஃப்வோர் ஜுலஸ் பிஜோர்ன்சன். இவர் அமெரிக்க தொலைக்காட்சி துணை நடிகராகவும் உள்ளார். இவர் பிலிஃப்பைன்ஸ் நாட்டில் வலிமையான மனிதர்கள் கண்டறியும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்யில் 7 வது முறையாக பங்கேற்ற பிஜோர்ன்சன் உலகின் வலிமையான மனிதர் என்ற பட்டத்தை வென்றார். 
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.
தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

ஃபாத்திமா இறந்த பிறகு, அவரது உடைமைகளை சோதித்து பார்த்த போது அவரது பையில் மட்டுமே ஐந்து மில்லியன் லெபனான் பணம் இருந்தது அறியப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 2.25 இலட்சம் ஆகும்.

ஃபாத்திமாவின் பையை துழாவிக் கொண்டிருக்கையில் அதிலிருந்து வங்கி புத்தகம் ஒன்று சிக்கியது. அப்போது தான் ஃபாத்திமாவின் பெயரில் வங்கியில் 170 கோடி லெபனான் பணம் இருந்தது அறியவந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 7.5 கோடிக்கும் மேலாகும்.

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள எஸ் வி சேகர் கண்டுபிடித்து கொடுக்குமாறு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.துண்டு பிரசுரத்தில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.