Short News

விஜய் 62 வில் ஹிப்ஹாப் ஸ்டைல் டேன்ஸ்!

விஜய் 62 வில் ஹிப்ஹாப் ஸ்டைல் டேன்ஸ்!

நடிகர் விஜய் இயக்குனர் முருகதாஸ் உடன் 3 வது முறையாக விஜய் 62 வில் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் வைத்து படமாக்கப்பட்ட பாடலில் ஹிப்ஹாப் ஸ்டைல் நடனம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் விஜய்யின் நடனத்தை காண எதிர்பார்த்துள்ளனர். 
49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

49 சதவீத சரிவில் டாடா மோட்டார்ஸ்!

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மார்ச் 31 உடன் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லபாத்தில் சுமார் 49.20 சதவீத லாபத்தில் சரிவடைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 4,336.43 கோடி ரூபாயை லாபமாக பெற்ற நிலையில், இந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வெறும் 2,176.16 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

யுஎம் ட்யூட்டி 230 பைக் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பிரபல யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விரைவில் புதிய க்ரூஸர் மாடல் பைக்கை செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பைக் யுஎம் ட்யூட்டி 230 என்ற பெயரில் வெளியாகிறது. தற்போது 4 க்ரூஸர் மோட்டார்சைக்கிள்களையும், ஒரு மின்சார மாடலையும் யுஎம் நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

இந்த விழா ஓபிஎஸ்-க்கு ரொம்ப முக்கியமா?

சென்னை நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்ற அதிமுக கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ்,அமைச்சர்கள் ராஜேந்தி பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆனால் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு அமைச்சர் கூட எட்டிப்பார்க்காத நிலையில் ஓபிஎஸ்,அமைச்சர்கள் பூப்புனித விழாவில் பங்கேற்றிருப்பது தமிழர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.