Short News

மனைவிக்காக புடவை கட்டிய நடிகர்!

மனைவிக்காக புடவை கட்டிய நடிகர்!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஜெயசூர்யா. இவர் ‘நிஜன் மேரிகுட்டி' என்ற படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ஜெயசூர்யா தனது மனைவிக்காக புடவை கட்டியுள்ளார். இவரது மனைவி புடவை வியாபராம் செய்து வருகிறார். அவருடைய பிஸ்னஸுக்கு விளம்பரம் செய்ய ஜெயசூர்யா புடவை கட்டி எடுத்த போட்டோ கேரளாவில் கட்அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.
மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மாயனத்தை மீட்க கோரி ஆட்சியரிடம் நடனமாடிய பழங்குடியினர்!

மயான இடத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து மலைவாழ் மக்கள் வாழும் இடத்தையும் ஆக்கிரமித்து வருவதாக கோவையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் புகார் அளித்தனர். புகார் அளிக்கும் போது இசை கருவிகள் வாசித்து பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமாடி நூதன முறையில் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்துபுகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் அப்போது குற்றஞ்சாட்டினர்.
தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

தங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி?

ஃபாத்திமா இறந்த பிறகு, அவரது உடைமைகளை சோதித்து பார்த்த போது அவரது பையில் மட்டுமே ஐந்து மில்லியன் லெபனான் பணம் இருந்தது அறியப்பட்டது. இதன் இந்திய மதிப்பு 2.25 இலட்சம் ஆகும்.

ஃபாத்திமாவின் பையை துழாவிக் கொண்டிருக்கையில் அதிலிருந்து வங்கி புத்தகம் ஒன்று சிக்கியது. அப்போது தான் ஃபாத்திமாவின் பெயரில் வங்கியில் 170 கோடி லெபனான் பணம் இருந்தது அறியவந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு 7.5 கோடிக்கும் மேலாகும்.

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

எஸ்.வி. சேகரை துண்டு பிரசுரங்கள் மூலம் தேடும் பத்திரிகையாளர்கள்!

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக உள்ள எஸ் வி சேகர் கண்டுபிடித்து கொடுக்குமாறு கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.துண்டு பிரசுரத்தில் காவல் துறை அதிகாரிகளின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டு உள்ளது.