Short News

கமல் கட்சியை பதிவு செய்ய நேரம் கேட்பு?

கமல் கட்சியை பதிவு செய்ய நேரம் கேட்பு?

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டில் இருந்து வரும் 21ம் தேதி முதல் அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில்,தனது கட்சியை பதிவு செய்வதற்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவர் நாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மதுரையில் தனது கட்சியின் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டுள்ளதாக கூடப்படுகிறது.
அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

அமைதிக்கு ஏங்கும் மாலத்தீவு மக்கள்!

தனது அரசியல் அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணம் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளை அதிகரிக்க செய்கிறது. இதற்கு இந்தியா முதல் மாலத்தீவுவரை உதாரண சின்னங்களாக இருக்கின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துமாறு மாலத்தீவு அதிபருக்கு ஐரோப்பியா நாடுகள், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி..?

பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை தடுப்பது எப்படி என்பதை புவனேஷ்வர்குமார் வெளிப்படுத்தியுள்ளார். வேகத்தை குறைத்து பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் ரன் குவிக்க திணறுவார். மேலும் அப்போது சரியான நீளத்தில் வீசப்படும் பந்துகள் அவர்களுக்கு நெருக்கடியை அதிகரிக்கும். தொடர்ந்து இதனை கடைபிடிக்கும்போது விக்கெட்கள் சரிய வாய்ப்பு உள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை: அரசு திட்டம்!

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோ வந்த பிறகு சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க அதிரடி செலுகைகளை அறிவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளன.